கெடா மாநிலத்தைச் சேர்ந்த 5,031 அரசாங்க ஊழியர்களுக்கு தலா 3,000 ரிங்கிட் சிறப்பு போனஸ் வழங்கப்பட உள்ளது.
இந்த போனஸ் மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அம்மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முஹமட் சனூசி முஹமட் நோர் அறிவித்துள்ளார்.
இதற்காக மொத்தம் 15 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், முதல் தவணை இவ்வாண்டு டிசம்பர் மாதமும், இரண்டாவது தவணை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதமும், மூன்றாவது தவணை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
என்றாலும், ஒவ்வொரு தவணையிலும் வழங்கப்படும் தொகை குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.








