Nov 16, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் 5 ஆபத்துகள் அடையாளம் காணப்பட்டன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் 5 ஆபத்துகள் அடையாளம் காணப்பட்டன

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டால் நாட்டில் ஐந்து முக்கிய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகமான NAIO அடையாளம் கண்டுள்ளது.

அவற்றில் டீப்ஃபேக் (Deepfake) எனப்படும் போலி காணொளிகள் மற்றும் குரல் பதிவுகள் உருவாக்குதல், இணையவழித் தாக்குதல்கள், தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மீறல் ஆகியவை முக்கியமானவையாகும்.

மடானி அரசாங்கத்தின் முன்னெடுப்பில், 2026 முதல் 2030-ஆம் ஆண்டு வரையிலான தேசிய செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை உருவாக்குவதற்காக நடைபெற்ற கலந்துரையாடல்களில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் இந்த ஆபத்துகளைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஏஐ (AI) தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அதன் செயல்பாடுகள் மனிதர்களின் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருப்பதை உறுதிப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் என NAIO தெரிவித்துள்ளது.

மேலும், சட்ட விதிமுறைகள் மட்டுமே வளர்ந்து வரும் ஏஐ ஆபத்துகளைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்காது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →