Nov 15, 2026
Thisaigal NewsYouTube

2030-க்குள் மலேசியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாகும் சரவாக் - அபாங் ஜொஹாரி உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2030-க்குள் மலேசியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாகும் சரவாக் - அபாங் ஜொஹாரி உறுதி

வரும் 2030-ஆம் ஆண்டிற்க்குள் சரவாக் மாநிலமானது, மலேசியாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி மாநிலமாக உருவெடுக்கும் என அம்மாநில முதல்வர் அபாங் ஜொஹாரி துன் ஒபேங் தெரிவித்துள்ளார்.

கூச்சிங்கில் இன்று நடைபெற்ற பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்து கட்சி மாநாட்டில் உரையாற்றிய அவர், தற்போது பினாங்கு, சிலாங்கூர், ஜோகூர் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் உள்ள சரவாக், ஏற்றுமதியில் ஜோகூர் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களுடனான இடைவெளியைக் குறைத்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், மாநிலத்தின் தொழில்துறை விரிவாக்கம் மற்றும் எரிசக்தி தொடர்பான திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள், ஏற்றுமதித் திறனை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேவேளையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சரவாக் மாநிலத்தை ஆசியா வட்டாரம் மற்றும் உலக நாடுகளுக்கான முக்கிய மையமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அபாங் ஜொஹாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மீட்டெடுத்த புதிய சீர்திருத்தங்கள்: அன்வார் பெருமிதம்

நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மீட்டெடுத்த புதிய சீர்திருத்தங்கள்: அன்வார் பெருமிதம்

தாய்லாந்தில் கார்களில் சாகசம் செய்து காணொளி பதிவு: மலேசியர்கள் மூவருக்கு அபராதம்

தாய்லாந்தில் கார்களில் சாகசம் செய்து காணொளி பதிவு: மலேசியர்கள் மூவருக்கு அபராதம்

வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பைக் கட்டாயமாக்க அரசாங்கம் பரிசீலனை

வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தொலைபேசி எண் சரிபார்ப்பைக் கட்டாயமாக்க அரசாங்கம் பரிசீலனை

கனமழையால் ஐ-சிட்டி, செக்‌ஷன் 7 பகுதிகளில் திடீர் வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு

கனமழையால் ஐ-சிட்டி, செக்‌ஷன் 7 பகுதிகளில் திடீர் வெள்ளம் – போக்குவரத்து பாதிப்பு

பினாங்கில் இலவச டிக்டாக் நேரலை மையம் திறப்பு: அமைச்சர் ஸ்டீவன் சிம் தொடங்கி வைத்தார்

பினாங்கில் இலவச டிக்டாக் நேரலை மையம் திறப்பு: அமைச்சர் ஸ்டீவன் சிம் தொடங்கி வைத்தார்

மலேசியா – கனடா இடையே புதிய வர்த்தகக் கூட்டணி: எரிசக்தி, டிஜிட்டல் பொருளாரத்தில் முதலீட்டை அதிகரிக்கத் திட்டம்

மலேசியா – கனடா இடையே புதிய வர்த்தகக் கூட்டணி: எரிசக்தி, டிஜிட்டல் பொருளாரத்தில் முதலீட்டை அதிகரிக்கத் திட்டம்