எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தில் தாமான் சண்டேக்ஸ் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று காலை ரயில் சேவையானது தடைபட்டது.
இதனால் காலை நேரத்தில் பயணம் செய்த பல பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், கோளாறு ஏற்பட்ட ரயிலானது, சேவையிலிருந்து உடனடியாக அகற்றப்பட்டு, ஆய்வுக்காகப் பணிமனைக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, காலை 7.58 மணிக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
அதேவேளையில் பயணிகளுக்கு உதவ ஏற்பாடு செய்யப்பட்ட மாற்று ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இதனிடையே, ரயில் சேவைகள் வழக்கமான கால அட்டவணைக்குத் திரும்பும் வகையில் படிப்படியாகச் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், சேவையின் சீரான இயக்கத்தைக் கண்காணிக்க தொழில்நுட்பக் குழுவினர் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் ரேபிட் கேஎல் தெரிவித்துள்ளது.








