Jul 18, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் மீண்டும் உயர்ந்த வேலையின்மை விகிதம்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் மீண்டும் உயர்ந்த வேலையின்மை விகிதம்

Share:

மலேசியாவின் வேலையின்மை விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மீண்டும் 3 விழுக்காட்டை எட்டியுள்ளதால், நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 5,11,800 ஆகப் பதிவாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் 2.9 விழுக்காடாக இருந்த இந்த விகிதம், ஏப்ரலில் 0.1 விழுக்காடு உயர்ந்துள்ளதாகப் புள்ளியியல் துறைத் தலைமை அதிகாரி உசிர் மஹிடின் தெரிவித்துள்ளார். எனினும், நாட்டில் வேலைவாய்ப்பைப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 0.1 விழுக்காடு உயர்ந்து 1.68 கோடியாக அதிகரித்துள்ளது.

வேலை தேடுபவர்களில் பெரும்பாலானோர் 3 மாதங்களுக்கும் குறைவான காலமாக வேலை தேடி வருபவர்கள் என்றும், ஒட்டுமொத்தமாக நாட்டின் தொழிலாளர் சந்தை மிதமான வளர்ச்சியைக் கண்டுவருவதாகவும் புள்ளியியல் துறைத் தலைமை அதிகாரி உசிர் மஹிடின் குறிப்பிட்டுள்ளார்.

Related News