Apr 8, 2026
Thisaigal NewsYouTube
யோங் பெங்கில் புலி நடமாட்டம் - வதந்திகளை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

யோங் பெங்கில் புலி நடமாட்டம் - வதந்திகளை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை

Share:

ஜோகூர், யோங் பெங், கம்போங் சின் லிக் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மையல்ல என்று வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான பெர்ஹிலிட்ரன் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்த ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன், வைரலாகும் அந்தப் புகைப்படங்கள் மெர்சிங், பெல்டா நித்தார், பகுதியில் சில காலத்திற்கு முன்பு நடந்த பழைய சம்பவத்தைச் சேர்ந்தவை என்று உறுதிப்படுத்தினார்.

இதுவரை இப்பகுதியில் புலி நடமாட்டம் குறித்தோ அல்லது கால்நடைகள் தாக்கப்பட்டதோ எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் பதிவாகவில்லை. எனவே, பொதுமக்கள் இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதி செய்ய அரசு தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது என்று லிங் தியான் சூன் தெளிவுபடுத்தினார்.

Related News