கோலாலம்பூர், ஆகஸ்ட்.22-
பகாங், குவாந்தான், சுல்தான் ஹாஜி அஹ்மாட் ஷா விமான நிலையத்தின் ஓடு பாதையில் அரச மலேசிய ஆகாயப்படைக்குச் சொந்தமான F/A-18 ஹோர்னட் ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் விமானியும், உதவியாளரும் உயிர் தப்பினர். அவர்கள் தற்போது குவாந்தான், தெங்கு அம்புவான் ஹஃப்ஸான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு 9.05 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் விபத்திற்கானக் காரணத்தைக் கண்டறிய விரிவாக ஆராயப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இச்சம்பவத்தில் காயமுற்ற விமானி மற்றும் துணை விமானிக்கு பிரதமர் தனது வருத்தத்தைப் பதிவுச் செய்தார்.








