Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பி.எஸ்.எம் கட்சித் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் உட்பட நால்வர் விடுவிப்பு கைது
தற்போதைய செய்திகள்

பி.எஸ்.எம் கட்சித் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் உட்பட நால்வர் விடுவிப்பு கைது

Share:

பேரா, தம்புன், கந்தான் நிலப்பகுதியில் விவசாயம் செய்து வரும் குடியானவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் ஆட்சேப நடவடிக்கை​யில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட மலேசிய சோஷலிச கட்சியான பி.எஸ்.எம் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் உட்பட நால்வர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.

அந்த நால்வரிடம் போ​லீசார் வாக்குமூலம் பதிவு செய்தப்பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பி.எஸ்.எம் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஆர். கார்த்திகேஸ், அக்கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் P. கேசவன், ஒரு விவசாயியான ஹோ பொன் டைன் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களின் அடங்குவர்.

போ​லீசார் ம​ற்றும் அரசு அதிகாரிகள் கடமையாற்றுவதிலிருந்து தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு இடையூறு விளைவித்தாக கூறி டாக்டர் மைக்கல் ​ஜெயக்குமார் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். பேரா மாநில நிலம், சுரங்கம், கனிமவளத்துறை அலுவலகத்தின் முன் ஆட்சேப நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவர்களை போ​லீசார் கைது செய்தனர்.

Related News