சில மணி நேரத்திற்கு முன்பு பிரசவிக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் சிசு ஒன்று, குப்பைத் தொட்டியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் மலாக்கா, கிலேபாங் பெசார், தாமான் பத்தாய் எமாஸ், ஃப்ளாட் லங்காவி அடுக்குமாடி குடியிருப்புப்பகுதி அருகில் நிகழ்ந்தது.
குளியல் துண்டினால் சுற்றப்பட்ட அந்த சிசுவின் அழும் சத்தம் கேட்டு, 18 வயது இளைஞர் ஒருவர், அந்தக் குப்பைத் தொட்டி அருகில் சென்று பார்த்த போது குழந்தை ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.
தாமான் பந்தாய் எமாஸ் ஸை சேர்ந்த அந்த இளைஞர், இது குறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த தம்பதியர், இன்னும் தொப்புள் கொடி அவிழ்க்கப்படாத நிலையில் இருந்த அந்த சிசுவை மீட்டு, பிளாஸ்டிக்கினால் சுற்றி, இரவு 10.50 மணியளவில் பத்தாங் திகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக கிறிஸ்டோபர் பாட்டிட் விளக்கினார்.
உடலில் எவ்வித காயமின்றி காணப்பட்ட அந்த சிசு, பின்னர் மருத்துவ கவனிப்புக்காக மலாக்கா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


