Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கார் - குப்பை லாரி மோதல் - இரு சகோதரர்கள் கருகி பலி
தற்போதைய செய்திகள்

கார் - குப்பை லாரி மோதல் - இரு சகோதரர்கள் கருகி பலி

Share:

நேற்று, ஈப்போவில் உள்ள பெர்சாம் தொழிற்பேட்டையில் காரும் குப்பை லாரியும் மோதிக்கொண்ட சம்பவத்தில் பலியான மூவரில் இரண்டு சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

20 வயது எம் க்ரிஷ்னா, அவரது 16 தம்பி பவிலேஷ் இவர்களின் உறவினரான 16 வயது என்கே சுபாஷ் வர்மன்ஆகியோர் ப்ரோத்தோன் பெர்டானா தஞ்சோங் இரம்புத்தானில் இருந்து காரில் பயணம் செய்தார்கள் என ஈப்போ மாவட்டக் காவல் துறை தலைவர் உதவி ஆணையர் யஹாயா ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

சாலையின் ஒரு வளைவு பகுதியில் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த குப்பை லாரியை அந்த மூவர் பயணித்தக் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

லாரியின் அடியில் சிக்கிக் கொண்ட கார் தீ பிடித்துக் கொண்டதில் அந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

குப்பை லாரியை ஓட்டி வந்தவருக்கும் 4 பணியாளர்களுக்கும் எந்தக் காயமும் ஏற்பட வில்லை என யஹாயா ஹாஸ்ஸான் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

உயிரிழந்தவர்களின் சடலம் ஈப்போ பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு அவர்களின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என அவர் மேலும் கூறினார்.

Related News