Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மரணத் தண்டனை நிலைநிறுத்தப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மரணத் தண்டனை நிலைநிறுத்தப்பட்டது

புத்ராஜெயா, ஜூன்.26-

கடந்த 2018 ஆம் ஆண்டு தனது ஒன்பது வயது மகளைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தந்தை ஒருவருக்கு அத்தண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்குத் தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி அஹ்மாட் ஸைடி இப்ராஹிம், சம்பந்தப்பட்ட நபர் புரிந்த குற்றத்திற்கு சிரம்பான் உயர் நீதிமன்றம் விதித்த மரணத் தண்டனை நிலைநிறுத்துவதாகத் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

ஒரு முன்னாள் இராணுவ வீரரான 43 வயது முகமட் அப்துல்லா முகமட் கடந்த 2018 ஆம் ஆண்டு இரவு 11.30 மணியளவில் நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சன், லுக்குட், தாமான் விஸ்தா ஜெயாவில் உள்ள தனது வீட்டில் ஒன்பது வயது மகளைக் கொன்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தொழுகையில் ஈடுபடவில்லை என்பதற்காக அந்த ஒன்பது வயது சிறுமியையும், அவரின் தங்கையுடன் சேர்ந்து உடலை தாழ்த்தி எழுந்திருக்கும் புஷ் அல் முறையை 500 தடவை செய்யச் சொல்லி அந்த சிறுமியைக் கொன்றதாக முகமட் அப்துல்லா குற்றஞ்சாட்டப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →