கோலாலம்பூர், அக்டோபர்.07-
வரும் அக்டோபர் 20-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்கள் கூடுதல் விடுமுறையை மலேசிய கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாநிலங்களைப் பொருத்து A, B என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த விடுமுறை நாட்கள் தீபாவளிக்கு முந்தைய நாளிலும், அதற்குப் பிந்தைய நாளிலும் அளிக்கப்பட்டுள்ளன.
அதன் படி,கெடா, கிளந்தான், திரங்கானு மாநிலங்களில் இக்கூடுதல் விடுமுறை நாட்கள் 19 மற்றும் 21 அக்டோபர் ஆகிய தேதிகளிலும், மலாக்கா, ஜோகூர், நெகிரி செம்பிலான், பாஹாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சிலாங்கூர், கோலாலம்பூர், லபுவான், புத்ராஜெயா ஆகிய மாநிலங்களில் 21 மற்றும் 22 அக்டோபர் ஆகிய தேதிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் சரவாக்கில் 20 அக்டோபர் ஒருநாள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய கல்வியமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.








