முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கின் வங்கி கணக்கிற்கு அரபு நாட்டில் இருந்து குறிப்பிட்ட நிதி ஒன்று வந்ததாக 1எம்டிபி வழக்கை விசாரிக்கும் அதிகாரியான புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஃபோ வெய் மின் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்நாட்டில் இருந்து கடந்த 2011ஆம் ஆண்டு நஜிப்பின் எம்பேங்க் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது தெரிய வந்துள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ப்ரின்ஸ் ஃபைசால் துர்க்கி அல் சவுட் ரியாட், நிதி அமைச்சு ஆகிய தரப்புகளிடம் இருந்து சில பணபரிவர்த்தனை நடவடிக்கைகள் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பண பரிவர்த்தனை நடந்ததை உறுதிப்படுத்தும் வங்கி அறிக்கையைக் காவல் துறையினரின் வசம் இல்லை என ஃபோ வெய் மின் தெரிவித்தார்.
முன்னதாக, 1எம்.டி.பி நிதி மோசடி தொடர்பாக 25 குற்றச்சாடுகளை நஜிப் எதிர்கொண்டுள்ளார். AMBANK வங்கி கணக்கில் சுமார் 2.28 பில்லியன் ரிங்கிட் புகுந்ததாக நஜிப்பிற்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
இந்த வழக்கிற்கு நீதிபதி கொல்லின் லாரண்ஸ் செகுவாரா நீதிபதியாக தலைமையேற்றுள்ளார்








