Nov 24, 2026
Thisaigal NewsYouTube

பாதுகாப்பான இணையப் பயன்பாட்டு பிரச்சாரத்தில் 28 லட்சம் பேர் பங்கேற்பு - தொடர்புத் துறை அமைச்சு தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாதுகாப்பான இணையப் பயன்பாட்டு பிரச்சாரத்தில் 28 லட்சம் பேர் பங்கேற்பு - தொடர்புத் துறை அமைச்சு தகவல்

மலேசியாவில் பாதுகாப்பான இணையப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரத்தில் இதுவரை 28 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக தொடர்புத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சாரத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்து 903 பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்களுக்காக 3 ஆயிரத்து 882 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, இணையவழி ஆபத்துகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாப்பதே இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2025-ஆம் ஆண்டின் இணையப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, இணையத் தளங்களைக் கண்காணித்து, விதிமுறைகளை மீறும் தளங்கள் மீது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →