Nov 24, 2026
Thisaigal NewsYouTube

மலேசியாவிலிருந்து 10,000 ரோஹிங்கியா அகதிகளை ஏற்க துருக்கி அரசாங்கம் மறுப்பு – அன்வார் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியாவிலிருந்து 10,000 ரோஹிங்கியா அகதிகளை ஏற்க துருக்கி அரசாங்கம் மறுப்பு – அன்வார் தகவல்

மலேசியாவில் உள்ள 10,000 ரோஹிங்கியா அகதிகளை ஏற்க, துருக்கி அரசாங்கம் தயாராக இல்லை என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே நான்கு மில்லியனுக்கும் அதிகமான அகதிகளுக்குத் தங்குமிடம் வழங்கி வருவதால், மலேசியாவின் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியாது என துருக்கி அரசாங்கம் இரண்டு நாட்களுக்கு முன்பு நேரடியாகத் தெரிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் காரிம் எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதிலளித்த அன்வார், அகதிகள் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் 10,000 பேரை மூன்றாவது நாடுகளில் மறுகுடியேற்றம் செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

மேலும், துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி முன்வைத்த இந்தப் பரிந்துரை, அகதிகளை மூன்றாவது நாடுகளில் மறுகுடியேற்றம் செய்ய வேண்டும் என்ற மலேசியாவின் கொள்கைக்கு ஏற்ப அமைந்துள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →