ஈப்போ, ஆகஸ்ட்.23-
இரண்டு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஐந்து பெண்கள் காயமுற்றனர். இந்தச் சம்பவம் இன்று மதியம் 12.02 மணியளவில் வடக்கு தெற்கு நெடுங்சாலையின் 368.5 ஆவது கிலோமீட்டரில் ஸ்லிம் ரிவர் - சுங்கை இடையே நிகழ்ந்தது.
ஒரு காரில் 18 வயது பெண் உட்பட நான்கு பேர் பயணம் செய்துள்ளனர். அதில் ஒருவர் காரின் பின் இருக்கையில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார். மற்றொரு காரைச் செலுத்திய பெண்ணும் இதில் காயமுற்றதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபாரொட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.








