மஞ்சோங், ஆகஸ்ட்.20-
கடந்த மே மாதத்திலிருந்து பாலியல் வர்த்தகத்திற்காக 14 வயது இரட்டைச் சகோதரிகளைக் கடத்தியதாக இரண்டு நண்பர்கள், பேரா, ஶ்ரீ மஞ்சோங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
25 வயது முகமட் முஸ்தாகிம் முகமட் ஸுபெர் மற்றும் 26 வயது ஷாஸ்வானி முகமட் ஹாஷிம் ஆகிய இருவரும் நீதிபதி அஸிஸா அஹ்மாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2025 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி முதல் ஜுன் 15 ஆம் தேதி வரை மஞ்சோங் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜாலான் உத்தாமா மரினா ஐலண்ட், தெலுக் முரு, லூமுட் என்ற இடத்தில் இருவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவர்களின் இத்தகைய நடவடிக்கையினால் இரட்டைச் சகோதரிகள் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








