Mar 27, 2026
Thisaigal NewsYouTube
தந்தையைக் கொலை செய்ததாக நம்பப்படும் மகன் கைது
தற்போதைய செய்திகள்

தந்தையைக் கொலை செய்ததாக நம்பப்படும் மகன் கைது

Share:

ஈப்போ, ஜூன்.25-

தனது தந்தையைக் கொலை செய்ததாக நம்பப்படும் மகன் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு 8 மணியளவில் ஈப்போ, தாமான் தாசேக் டாமாயில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் 31 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைமால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட 57 வயதுடைய நபர், வீட்டில் சமையல் அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வரும் வேளையில், கைது செய்யப்பட்ட நபரை 7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் போலீசார் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News