Nov 28, 2026
Thisaigal NewsYouTube

இந்தியர்களுக்கான விசா விலக்கை மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும்: சுற்றுலாத்துறை சம்மேளனம் அரசாங்கத்துக்கு அவசர கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்தியர்களுக்கான விசா விலக்கை மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும்: சுற்றுலாத்துறை சம்மேளனம் அரசாங்கத்துக்கு அவசர கோரிக்கை

இந்தியப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள 30 நாள் விசா விலக்கு வசதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என மலேசிய சுற்றுலாத்துறை சம்மேளனம் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தச் சலுகை 2027 ஜனவரி முதலாம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், இந்தியா, மலேசியாவின் முக்கிய சுற்றுலாச் சந்தைகளில் ஒன்றாக இருப்பதாக அதன் தலைவர் டாக்டர் ஶ்ரீ கணேஷ் மிஷேல் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 15 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு வந்ததுடன், அவர்களின் சுற்றுலா வருவாய் 14.8 பில்லியன் ரிங்கிட்டை எட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், விசா விலக்கு முடிவுக்கு வருவதால் சுற்றுலாத்துறையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரித்த அவர், டிசம்பர் முதலாம் தேதி இணையவழி விசா விண்ணப்பங்கள் தொடங்குவதற்கு முன்பே அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பதவிக்குத் திரும்புமாறு அன்வார் அழைப்பு! மௌனம் காக்கும் அந்தோணி லோக்

பதவிக்குத் திரும்புமாறு அன்வார் அழைப்பு! மௌனம் காக்கும் அந்தோணி லோக்

கோலாலம்பூர் புடு மார்க்கெட்டில் எலித் தொல்லை உறுதி! அதிரடிச் சோதனைக்கு சுகாதார அமைச்சு உத்தரவு

கோலாலம்பூர் புடு மார்க்கெட்டில் எலித் தொல்லை உறுதி! அதிரடிச் சோதனைக்கு சுகாதார அமைச்சு உத்தரவு

இந்தியச் சமூகத்தினருக்கு பாரிசான் நேஷனலில் நேரடி உறுப்பினர் வாய்ப்பு, 3 பில்லியன் ரிங்கிட் முதலீடு, 1 பில்லியன் ரிங்கிட் வட்டியில்லாக் கடன் முன்மொழிவு

இந்தியச் சமூகத்தினருக்கு பாரிசான் நேஷனலில் நேரடி உறுப்பினர் வாய்ப்பு, 3 பில்லியன் ரிங்கிட் முதலீடு, 1 பில்லியன் ரிங்கிட் வட்டியில்லாக் கடன் முன்மொழிவு

தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்து தேசிய நல்லிணக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்: கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல்

தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்து தேசிய நல்லிணக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்: கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல்

மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்: பிள்ளைகளுடன் பெற்றோர் நேரம் செலவிட வேண்டும் – துணை அமைச்சர் வலியுறுத்தல்

மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்: பிள்ளைகளுடன் பெற்றோர் நேரம் செலவிட வேண்டும் – துணை அமைச்சர் வலியுறுத்தல்

மித்ரா கல்வி நிதி பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு அல்ல: குற்றச்சாட்டுகளை மறுத்தது மித்ரா

மித்ரா கல்வி நிதி பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு அல்ல: குற்றச்சாட்டுகளை மறுத்தது மித்ரா