Nov 28, 2026
Thisaigal NewsYouTube

பதவிக்குத் திரும்புமாறு அன்வார் அழைப்பு! மௌனம் காக்கும் அந்தோணி லோக்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பதவிக்குத் திரும்புமாறு அன்வார் அழைப்பு! மௌனம் காக்கும் அந்தோணி லோக்

ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக், போக்குவரத்து அமைச்சர் பதவிக்குத் திரும்புமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்த அழைப்பு குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துள்ளார்.

செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என்பதைத் தலையசைத்தும் கையசைத்தும் அவர் உணர்த்தினார்.

முன்னதாக, நெகிரி செம்பிலானில் நடைபெற்ற மடானி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் அன்வார், அந்தோணி லோக்கின் பதவி விலகல் முடிவை ஏற்க முடியாது என்றும், அவர் விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கின் எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் வழக்கில் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதித்த முடிவுக்கு ஜசெக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 10ஆம் தேதி அந்தோணி லோக் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

இருப்பினும், அவரது பதவி விலகலை ஏற்காத பிரதமர், அந்தோணி லோக்கை விடுப்பில் இருக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கோலாலம்பூர் புடு மார்க்கெட்டில் எலித் தொல்லை உறுதி! அதிரடிச் சோதனைக்கு சுகாதார அமைச்சு உத்தரவு

கோலாலம்பூர் புடு மார்க்கெட்டில் எலித் தொல்லை உறுதி! அதிரடிச் சோதனைக்கு சுகாதார அமைச்சு உத்தரவு

இந்தியர்களுக்கான விசா விலக்கை மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும்: சுற்றுலாத்துறை சம்மேளனம் அரசாங்கத்துக்கு அவசர கோரிக்கை

இந்தியர்களுக்கான விசா விலக்கை மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும்: சுற்றுலாத்துறை சம்மேளனம் அரசாங்கத்துக்கு அவசர கோரிக்கை

இந்தியச் சமூகத்தினருக்கு பாரிசான் நேஷனலில் நேரடி உறுப்பினர் வாய்ப்பு, 3 பில்லியன் ரிங்கிட் முதலீடு, 1 பில்லியன் ரிங்கிட் வட்டியில்லாக் கடன் முன்மொழிவு

இந்தியச் சமூகத்தினருக்கு பாரிசான் நேஷனலில் நேரடி உறுப்பினர் வாய்ப்பு, 3 பில்லியன் ரிங்கிட் முதலீடு, 1 பில்லியன் ரிங்கிட் வட்டியில்லாக் கடன் முன்மொழிவு

தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்து தேசிய நல்லிணக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்: கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல்

தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்து தேசிய நல்லிணக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்: கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல்

மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்: பிள்ளைகளுடன் பெற்றோர் நேரம் செலவிட வேண்டும் – துணை அமைச்சர் வலியுறுத்தல்

மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்: பிள்ளைகளுடன் பெற்றோர் நேரம் செலவிட வேண்டும் – துணை அமைச்சர் வலியுறுத்தல்

மித்ரா கல்வி நிதி பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு அல்ல: குற்றச்சாட்டுகளை மறுத்தது மித்ரா

மித்ரா கல்வி நிதி பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு அல்ல: குற்றச்சாட்டுகளை மறுத்தது மித்ரா