Nov 28, 2026
Thisaigal NewsYouTube

மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்: பிள்ளைகளுடன் பெற்றோர் நேரம் செலவிட வேண்டும் – துணை அமைச்சர் வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்: பிள்ளைகளுடன் பெற்றோர் நேரம் செலவிட வேண்டும் – துணை அமைச்சர் வலியுறுத்தல்

பள்ளி மாணவர்களிடையே மன அழுத்தம் மற்றும் தற்கொலை முயற்சிகள் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது என்று தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் இராமராஜ் தெரிவித்துள்ளார்.

பாடச்சுமை, பள்ளிச் சூழல் மற்றும் சமூகச் சவால்கள் மாணவர்களின் மனநலத்தைப் பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பெற்றோர்கள் பிள்ளைகளுடன் மனம்விட்டுப் பேசி, அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்று பினாங்கு தேசிய வகை இராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோது யுனேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.

மேலும், வீட்டில் அன்பும் அரவணைப்பும் கிடைக்காத பிள்ளைகள் தவறான நட்புகள் மற்றும் உறவுகளில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் துணை அமைச்சர் யுனேஸ்வரன் எச்சரித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்து தேசிய நல்லிணக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்: கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல்

தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்து தேசிய நல்லிணக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்: கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல்

மித்ரா கல்வி நிதி பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு அல்ல: குற்றச்சாட்டுகளை மறுத்தது மித்ரா

மித்ரா கல்வி நிதி பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு அல்ல: குற்றச்சாட்டுகளை மறுத்தது மித்ரா

நாடெங்கிலும் நாளை மைசைரன் அவசர எச்சரிக்கை சோதனை: பொதுமக்களின் கைப்பேசிகளுக்கு அவசர அறிவிப்புகள் அனுப்பப்படும்

நாடெங்கிலும் நாளை மைசைரன் அவசர எச்சரிக்கை சோதனை: பொதுமக்களின் கைப்பேசிகளுக்கு அவசர அறிவிப்புகள் அனுப்பப்படும்

போக்குவரத்து அமைச்சராகப் பணிகளைத் தொடருமாறு அந்தோணி லோக்கிற்கு அன்வார் அழைப்பு

போக்குவரத்து அமைச்சராகப் பணிகளைத் தொடருமாறு அந்தோணி லோக்கிற்கு அன்வார் அழைப்பு

சித்தியவான், ஆயர் தாவாரில் வீடுகளில் புகுந்து ஆயுத முனையில் கொள்ளை - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சித்தியவான், ஆயர் தாவாரில் வீடுகளில் புகுந்து ஆயுத முனையில் கொள்ளை - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

2027 சீ விளையாட்டுப் போட்டியில் கூடுதல் போட்டிகளைச் சேர்க்க மலேசியா ஆதரவு

2027 சீ விளையாட்டுப் போட்டியில் கூடுதல் போட்டிகளைச் சேர்க்க மலேசியா ஆதரவு