Nov 28, 2026
Thisaigal NewsYouTube

நாடெங்கிலும் நாளை மைசைரன் அவசர எச்சரிக்கை சோதனை: பொதுமக்களின் கைப்பேசிகளுக்கு அவசர அறிவிப்புகள் அனுப்பப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நாடெங்கிலும் நாளை மைசைரன் அவசர எச்சரிக்கை சோதனை: பொதுமக்களின் கைப்பேசிகளுக்கு அவசர அறிவிப்புகள் அனுப்பப்படும்

நாடெங்கிலும் அவசர காலங்களில் பொதுமக்களின் கைப்பேசிகளுக்கு உடனடியாக எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் மைசைரன் தேசிய அவசர எச்சரிக்கை அமைப்பின் நாடு தழுவிய சோதனை நாளை நவம்பர் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

காலை 10.10 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் இந்தச் சோதனையின் மூலம், அவசர எச்சரிக்கைகளை விரைவாகக் கைப்பேசிகளுக்கு அனுப்பும் அமைப்பின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

மைசைரன் என்பது வெள்ளம், கடுமையான வானிலை, சுனாமி, பெரும் தீ விபத்துகள், அபாயகரமான ரசாயனப் பொருட்கள் தொடர்பான சம்பவங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்களில் எச்சரிக்கை விடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தச் சோதனையின் மூலம் எச்சரிக்கைத் தகவல்கள் எவ்வாறு அனுப்பப்படுகின்றன, கைப்பேசிகளில் அவை முறையாகப் பெறப்படுகின்றனவா, தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளனவா என்பவை ஆய்வு செய்யப்படும்.

4G மற்றும் 5G தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் செல் புரோட்காஸ்ட் சிஸ்டம் அடிப்படையில் மைசைரன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், கைப்பேசி இணையத் தரவைப் பயன்படுத்தாமலேயே ஒரே நேரத்தில் பலருக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்ப முடியும். எஸ்எம்எஸ் முறையில் ஒவ்வொரு தொலைபேசி எண்ணுக்கும் தனித்தனியாக குறுஞ்செய்தி அனுப்பப்படுவதற்கு மாறாக, இந்தத் தொழில்நுட்பம் நெட்வொர்க் நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களிலும், இணையத் தரவு முடிந்திருந்தாலும் எச்சரிக்கைகளைப் பெற உதவுகிறது என்று எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.

எஸ்எம்எஸ் முறையில் ஒவ்வொரு தொலைபேசி எண்ணுக்கும் தனித்தனியாக குறுஞ்செய்தி அனுப்பப்படுவதற்கு மாறாக, இந்தத் தொழில்நுட்பம் நெட்வொர்க் நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களிலும், இணையத் தரவு முடிந்திருந்தாலும் எச்சரிக்கைகளைப் பெற உதவுகிறது என்று எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
போக்குவரத்து அமைச்சராகப் பணிகளைத் தொடருமாறு அந்தோணி லோக்கிற்கு அன்வார் அழைப்பு

போக்குவரத்து அமைச்சராகப் பணிகளைத் தொடருமாறு அந்தோணி லோக்கிற்கு அன்வார் அழைப்பு

சித்தியவான், ஆயர் தாவாரில் வீடுகளில் புகுந்து ஆயுத முனையில் கொள்ளை - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சித்தியவான், ஆயர் தாவாரில் வீடுகளில் புகுந்து ஆயுத முனையில் கொள்ளை - 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

2027 சீ விளையாட்டுப் போட்டியில் கூடுதல் போட்டிகளைச் சேர்க்க மலேசியா ஆதரவு

2027 சீ விளையாட்டுப் போட்டியில் கூடுதல் போட்டிகளைச் சேர்க்க மலேசியா ஆதரவு

காஜாங் நகைக்கடையில் துணிகரக் கொள்ளை - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

காஜாங் நகைக்கடையில் துணிகரக் கொள்ளை - 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

ஏர் ஏசியா ஊழியர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு மாத இறுதியில்தான் சம்பளம்! பணச் செலவைக் குறைக்க அதிரடி நடவடிக்கை

ஏர் ஏசியா ஊழியர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு மாத இறுதியில்தான் சம்பளம்! பணச் செலவைக் குறைக்க அதிரடி நடவடிக்கை

நேபாளத்தில் மலேசிய அடையாள அட்டைகள்? சமூக ஊடகக் காணொளி போலியானது என ஜேபிஎன் விளக்கம்

நேபாளத்தில் மலேசிய அடையாள அட்டைகள்? சமூக ஊடகக் காணொளி போலியானது என ஜேபிஎன் விளக்கம்