ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் மீண்டும் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
சிரம்பான், பாரோயில் நடைபெற்ற 2026 யாகின் மடானி நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வார், அந்தோணி லோக் விரைவில் தனது அமைச்சர் பணிகளைத் தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக் எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 10-ஆம் தேதி அந்தோணி லோக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இந்நிலையில் அந்தோணி லோக்கின் ராஜினாமாவைத் தாம் ஏற்கவில்லை என்றும், தற்காலிகமாக அவர் விடுமுறை எடுத்துக் கொள்ளுமாறும் அன்வார் கூறி வருகின்றார்.
இருப்பினும், தனது ராஜினாமா முடிவில் அந்தோணி லோக் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.








