Nov 28, 2026
Thisaigal NewsYouTube

இந்தியச் சமூகத்தினருக்கு பாரிசான் நேஷனலில் நேரடி உறுப்பினர் வாய்ப்பு, 3 பில்லியன் ரிங்கிட் முதலீடு, 1 பில்லியன் ரிங்கிட் வட்டியில்லாக் கடன் முன்மொழிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்தியச் சமூகத்தினருக்கு பாரிசான் நேஷனலில் நேரடி உறுப்பினர் வாய்ப்பு, 3 பில்லியன் ரிங்கிட் முதலீடு, 1 பில்லியன் ரிங்கிட் வட்டியில்லாக் கடன் முன்மொழிவு

மலேசிய இந்தியச் சமூகத்தினர் பாரிசான் நேஷனல் கூட்டணியில் நேரடி உறுப்பினர்களாக இணைவத தாம் வரவேற்பதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார்.

தனிநபர்கள் மட்டுமின்றி, இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களும் பாரிசான் நேஷனலின் எந்தவொரு உறுப்புக் கட்சியிலும் இணையாமல் நேரடியாகப் பாரிசானில் உறுப்பினராகலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்று ஜோகூர் பாருவில் நடைபெற்ற ம.இ.கா.வின் 80ஆவது தேசியப் பேரவையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஹ்மாட் ஸாஹிட், அடுத்த ஆண்டு 10ஆவது ஆண்டை எட்டவுள்ள மலேசிய இந்தியர் பெருந்திட்டமான புளுபிரிண்டை மறுஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

அதன்படி, இந்தியச் சமூகத்திற்கான திறந்தநிலை நம்பிக்கை நிதி முதலீட்டை 1.5 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 3 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தவும், வட்டியில்லாக் கடன் ஒதுக்கீட்டை 500 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 1 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கவும் முன்மொழியப்படும் என்றார்.

இந்த மறுஆய்வு தொடர்பாக ம.இ.கா. மற்றும் இந்தியத் தலைவர்கள் தலைமையிலான தோழமைக் கட்சிகளுடன் கலந்துரையாடவும் பணித்துள்ளதாக அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பதவிக்குத் திரும்புமாறு அன்வார் அழைப்பு! மௌனம் காக்கும் அந்தோணி லோக்

பதவிக்குத் திரும்புமாறு அன்வார் அழைப்பு! மௌனம் காக்கும் அந்தோணி லோக்

கோலாலம்பூர் புடு மார்க்கெட்டில் எலித் தொல்லை உறுதி! அதிரடிச் சோதனைக்கு சுகாதார அமைச்சு உத்தரவு

கோலாலம்பூர் புடு மார்க்கெட்டில் எலித் தொல்லை உறுதி! அதிரடிச் சோதனைக்கு சுகாதார அமைச்சு உத்தரவு

இந்தியர்களுக்கான விசா விலக்கை மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும்: சுற்றுலாத்துறை சம்மேளனம் அரசாங்கத்துக்கு அவசர கோரிக்கை

இந்தியர்களுக்கான விசா விலக்கை மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும்: சுற்றுலாத்துறை சம்மேளனம் அரசாங்கத்துக்கு அவசர கோரிக்கை

தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்து தேசிய நல்லிணக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்: கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல்

தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்து தேசிய நல்லிணக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்: கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தல்

மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்: பிள்ளைகளுடன் பெற்றோர் நேரம் செலவிட வேண்டும் – துணை அமைச்சர் வலியுறுத்தல்

மாணவர்களிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்: பிள்ளைகளுடன் பெற்றோர் நேரம் செலவிட வேண்டும் – துணை அமைச்சர் வலியுறுத்தல்

மித்ரா கல்வி நிதி பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு அல்ல: குற்றச்சாட்டுகளை மறுத்தது மித்ரா

மித்ரா கல்வி நிதி பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு அல்ல: குற்றச்சாட்டுகளை மறுத்தது மித்ரா

இந்தியச் சமூகத்தினருக்கு பாரிசான் நேஷனலில் நேரடி உறுப்பின... | Thisaigal News