Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் திருடர்கள் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடர்கள் பிடிபட்டனர்

Share:

கிள்ளான் வட்டாரத்தில் கடந்த புதன்கிழமை ரோந்து போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள் திருடர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முற்பட்ட அவர்களை பொது மக்கள் உதவியுடன் வளைத்துப்பிடிக்கப்பட்டதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் த லைவர் ஏசிபி எஸ்.விஜயா ராவ் தெரிவித்தார்.

யாமஹா 135 எல்.சி மோட்டார் சைக்கிளில் சென்ற அவ்விருரையும் மடக்கி போலீசார் சோதனையிட்ட போது, மோட்டார் சைக்கிள் திருடுவதற்கு பல்முனை சாவி ஒன்றை அவர்கள் கொண்டு இருந்தது தெரியவந்துள்ளதாக ஏசிபி விஜயராவ் குறிப்பிட்டார்.

30 வயதுமதிக்கத் தக்க அவ்விருவரும் பண்டார் பாரு கிள்ளான் கில் பிற்பகல் 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் ஏசிபி விஜயராவ் தெரிவித்தார்.

Related News