Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அமலாக்க அதிகாரியைத் தாக்கிய ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

அமலாக்க அதிகாரியைத் தாக்கிய ஆடவர் கைது

Share:

ஜொகூரில், பத்து பஹாட் பகுதியில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பான குற்றம் புரிந்த ஆடவர் ஒருவருக்கு அமலாக்க அதிகாரி அபராதம் விதிக்கும்போது அதனைத் தடுத்தக் குற்றத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவல் வெளியிட்ட பத்து பகாட் மாவட்டக் காவல் துறை தலைவர் Ismail Dollah குறிப்பிடுகயில், இச்ச,பவம் குறித்து தமக்கு சம்பந்தப்பட்ட பத்து பகாட் மாநகர் மன்ற அதிகாரியிடம் இருந்து நேற்று பிற்பகல் 3.50 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.

அன்றைய நாள் முற்பகல் 11 மணி அளவில் தாமான் ஃப்லோரா வில் உள்ள ஜாலான் ஃப்லோரா பகுதியில் பார்க்கிங் கூப்பன் இல்லாத வாகனத்திற்கு அமலாக்க அதிகாரி அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் கூறினார்.

33 வயது மிக்க அந்த ஆடவர் அமலாக்க அதிகாரியைத் தமது கடமையைச் செய்ய விடாமல் தடுத்துள்ளதோடு அதிகாரியைத் தாக்கியுள்ளார் என சினார் ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது.

மோட்டார் சைக்கிளில் இருந்த அந்த அதிகாரியை சம்பந்தப்பட்ட ஆடவர் தள்ளி விட்டதோடு கைகலப்பும் நேர்ந்துள்ளதௌ. சுற்றி இருந்த பொது மக்கள் அந்தக் கைகலப்பைத் தடுத்து சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர்.

அந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டு பத்து பகாட்டில் உள்ள சுல்தானா நோரா இஸ்மாயில்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

அரசு அதிகாரியைத் தமது கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததோடு அவரின் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தை குற்றவியல் சட்டம் 186, 153 இன் படி விசாரிக்கப்படுவதாக இஸ்மாயில் குறிப்பிட்டார்.

Related News