Dec 4, 2025
Thisaigal NewsYouTube
நீர் விநியோகத் தடை 338 இடங்களை பாதிக்கும்
தற்போதைய செய்திகள்

நீர் விநியோகத் தடை 338 இடங்களை பாதிக்கும்

Share:

நாளை அக்டோபர் 10 ஆம் தேதி கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்படவிருக்கும் நீர் விநியோத் தடை, மொத்தம் 338 இடங்களை பாதிக்கச் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் பெட்டாலிங், கோலாலம்பூர் மற்றும் உலு லங்காட் மாவட்டங்களில் மட்டுமே நீர் விநியோகம் பாதிக்கும் என்று சிலாங்கூர் மாநில நீர் விநியோக நிறுவனமான அயேர் சிலாங்கூர் அறிவித்துள்ளது.

சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பராமரிப்பு பணியைத் தொடர்ந்து குடிநீர் விநியோகம் எல்லா பகுதிகளிலும் வழக்க நிலைக்கு திரும்ப அக்டோபர் 12 ஆம் தேதி வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி ஆகலாம் என்று அது தெரிவித்துள்ளது.

Related News