Sep 27, 2026
Thisaigal NewsYouTube
டீசல் மானியம் விவகாரம்: அதிகப்படியானோருக்கு நிதியுதவி வழங்க மலேசிய அரசு பரிசீலனை – நிதி அமைச்சரின் அரசியல் செயலாளர் தகவல்
தற்போதைய செய்திகள்

டீசல் மானியம் விவகாரம்: அதிகப்படியானோருக்கு நிதியுதவி வழங்க மலேசிய அரசு பரிசீலனை – நிதி அமைச்சரின் அரசியல் செயலாளர் தகவல்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.11-

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டப் பாதிக்கப்பட்டத் தரப்பினருக்கு நிதியுதவியை விரிவாக்கம் செய்வது குறித்து மலேசிய நிதியமைச்சு விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறது. தற்போது டீசல் மானியச் செலவு 700 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 6 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ள நிலையில், தகுதியுள்ள யாரும் விடுபடாத வகையில் 'பூடி 95' திட்டத்தைப் போன்ற ஒரு முறையைச் செயல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக நிதியமைச்சரின் அரசியல் செயலாளர் முஹமட் கமீல் அப்துல் முனிம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்விலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருந்தாலும், நாட்டின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு மிகவும் திறமையான, எளிமையான முறையில் இந்த மானியத் திட்டத்தைச் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News