கோலாலம்பூர், ஜூலை.19-
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வாகனங்களின் விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முறைப்படுத்தப்பட்ட கலால் வரி அமலாக்கத்தைத் தொடர்ந்து வாகனங்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் முறைப்படுத்தப்பட்ட கலால் வரி தொடர்பில் எத்தகைய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய நிதி அமைச்சின் விளக்கத்திற்காகத் தாங்கள் காத்திருப்பதாக எம்ஏஏ எனப்படும் ஆட்டோமோடிவ் மலேசியா சங்கத்தின் தலைவர் முகமட் ஷம்சோர் முகமட் ஸையின் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் திட்டத்தின் அடிப்படையில் இது செயல்படுத்தப்படும். ஆனால் அதன் அமலாக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க புதிய முறைகள் அல்லது வழிகள் குறித்து தங்களுக்கு அறிவிக்கப்படும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. எனவே இது தொடர்பான பேச்சு வாத்தைக்காக ஆட்டோமோடிவ் மலேசியா சங்கம் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முறைப்படுத்தப்பட்ட இந்த புதிய கலால் வரியின் தாக்கம், பழைய வடிவமைப்பைக் கொண்டு கணக்கிடப்பட்டால், ஓடிஆர் எனப்படும் சாலை பயன்பாட்டு விலையில் 10 முதல் 30 விழுக்காடு வரை வாகனங்களின் விலை உயர்வு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக முகமட் ஷம்சோர் தெரிவித்துள்ளார்.








