அலோர் ஸ்டார், ஜனவரி.05-
2026 ஆம் ஆண்டின் தொடங்கத்தில் புத்தாண்டுடன் மலேசியாவின் சுற்றுலாத்துறையை வரவேற்கும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து நுழைவாசல்களிலும் விசிட் மலேசியா 2026 எனும் சுலோகத்துடன் மலேசியா திருநாட்டில் நுழையும் அனைத்து சுற்றுப்பயணிகளையும் கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.
தேசிய அளவில் சுற்றுலா,கலை மற்றும் கலாச்சார அமைச்சி மலேசியாவிலுள்ள 13 மாநிலங்களில் 55 நுழைவாசல்களில் விசிட் மலேசியா 2026 வரவேற்புப் பிரச்சாரங்கள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் தலைமையில் நடத்தப்பட்டன.

அந்த வகையில் மலேசியாவின் வடப்பகுதியான கெடா மாநிலத்தில் ஆறு நுழைவாசல்களில் இந்த விசிட் மலேசியா 2026 நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதில் லங்காவி குவா மாவட்டத்திலும் , அலோர் ஸ்டார் சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையம், ICQS புக்கிட் காயு ஈத்தாம், தஞ்ஜோங் லெம்போங் மற்றும் Cruise Terminal Resort World ஆகிய இடங்கள் அடங்கும். இந்நிகழ்வில் மாவட்ட ரீதியாக பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதில் கெடா மாநில மேம்பாட்டு பிரிவின் துணைச் செயலாளர் டத்தோ ஹஜி முஹமட் ஃபௌஸி பின் முஸ்தஃபா கலந்துக் கொண்டுச் சிறப்பித்தார்.

விசிட் மலேசியா 2026 என்பது வெறும் சுற்றுலா பிரச்சாரம் மட்டுமல்ல. இது நமது ஒற்றுமை, அரவணைப்பு மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும். இவ்வாண்டு இப்பிரச்சாரத்தின் மூலம் 43 மில்லியன் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் இலக்கு உள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தையும் சுற்றுலாத்துறையையும் வலுப்படுத்த உதவும். 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 38.3 மில்லியன் சுற்றுப்பயணிகள் வருகை புரிந்திருப்பதாக மலேசிய சுற்றுலாத்துறை குறிப்பிட்டது.








