கோலாலம்பூர், ஜூலை.13-
உயர்க்கல்விக் கூட மாணவர்களிடையே ஐ.எஸ். தீவிரவாதக் குழுவின் செயல்பாடுகளை உயர்க்கல்வி அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சமீபத்தில் சொஸ்மா சட்டத்தின் கீழ் 36 வங்காளதேசிகள் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகையத் தீவிரவாதக் கருத்துக்கள் பரவாமல் தடுக்க, மலேசிய காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து தொடர்ச்சியானக் கண்காணிப்பு நடைபெற்று வருவதாக உயர்க்கல்வி அமைச்சர் ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் இந்தத் தீவிரவாத வலையமைப்பில் மலேசியர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








