Apr 8, 2026
Thisaigal NewsYouTube
புந்தோங் படுகொலை: 3R பிரச்சினை அல்ல - கும்பல் மோதலே காரணம்
தற்போதைய செய்திகள்

புந்தோங் படுகொலை: 3R பிரச்சினை அல்ல - கும்பல் மோதலே காரணம்

Share:

பேராக் மாநிலம், புந்தோங் பகுதியில் நேற்று இரவு நடந்த ஒரு கொலைச் சம்பவம், கும்பல் மோதலின் விளைவாக ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் இச்சம்பவம் ஒரு குறிப்பிட்ட கும்பல்களுக்கிடையே நடந்த மோதலை உள்ளடக்கியதாகவும், இது இன அல்லது 3R தொடர்புடைய பிரச்சினை அல்ல என்பதும் உறுதியாகியுள்ளதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கில் 23 வயது நபர் ஒருவரைக் கைது செய்துள்ள போலீசார், மேலதிக விசாரணைக்காக ஒரு வாரம் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.

இச்சம்பவத்தின் உண்மையான காரணத்தை கண்டறியும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நூர் ஹிஷாம் குறிப்பிட்டுள்ளார்.

Related News