Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கணவன்- மனைவியை மிரட்டியது: நால்வர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கணவன்- மனைவியை மிரட்டியது: நால்வர் கைது

பட்டர்வொர்த், நவ.6-


பட்டர்வொர்த், லோரோங் ரம்பாய் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று துப்பாக்கி வேட்டை கிளப்பி, கணவன் மனைவியை மிரட்டியது தொடர்பில் இரு சகோதரர்கள் உட்பட நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த நால்வரும் இன்று காலையில் பட்டர்வொர்த், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவர்கள் த டுத்து வைப்பதற்கான அனுமதியை போலீசார் பெற்றுள்ளனர்.

43 மற்றும் 53 வயதுடைய இரு நபர்களை இன்று தொடங்கி, வரும் திங்கட்கிழமை வரை 6 நாட்கள் தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட் பக்லிஸ் ரோஸ்லின் அனுமதி அளித்தார்.

அதேவேளையில் 50 வயது மதிக்கத்தக்க இரண்டு சகோதர்களை மூன்று நாட்கள் தடுத்து வைப்பதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

கணவன் மனைவி செய்து கொண்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் அந்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →