Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சான் சொவ் லின் சாலையில் டோல் கட்டணம் இலவசம்
தற்போதைய செய்திகள்

சான் சொவ் லின் சாலையில் டோல் கட்டணம் இலவசம்

Share:

கோலாலம்பூர் மாநகரில் புதிய வரவாக பார்க்கப்படும் எஸ்பிஇ எனப்படும் லெபோ ராயா செத்தியாவங்சா- பந்தாய் நெடுஞ்சாலை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த நெடுங்சாலையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகளுக்கு ஒரு மாத காலத்திற்கு டோல் கட்டணம் இலவசம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ செரி அலெக்சென்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.

அந்த நெடுஞ்சாலைக்கு பயன்படுத்தும் வாகன​மோட்டிகள் சான் சொவ் லின் டோல் சாவடியில் 30 நாட்களுக்கு எவ்வித கட்டணமின்றி பயணிக்க முடியும் என்று அந்த புதிய நெடுஞ்சாலையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News