Jun 29, 2026
Thisaigal NewsYouTube
நீலாய் வெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 63 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

நீலாய் வெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 63 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

Share:

சிரம்பான், பிப்ரவரி.28-

கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி நீலாய், டேசா பல்மாவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீடமைப்பு வளாகத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த 63 வயது முதியவர் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கோலாலம்பூர் மருத்துவமனையில் நேற்று இரவு 8.18 மணியளவில் அவர் மரணமடைந்ததை, நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா உறுதிப்படுத்தியுள்ளார்.

சிகிச்சைகளுக்குப் பலனளிக்காத அதிர்ச்சி நிலையில் அவரது உடல்நிலை இருந்ததால், அவரது மரணம் சம்பவித்துள்ளதாகவும் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 9-ஆம் தேதி, Yeoh Hock Sun என்ற அந்த நபருக்கு எதிராக, வெடிப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தது உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டன.

இருப்பினும், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்