Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கோவிட் 19 நோய்தொற்று தடுப்பு ஊசி குறித்து புதிய அறிவிப்பு வழங்கப்படும் - சுகாதார அமைச்சர்
தற்போதைய செய்திகள்

கோவிட் 19 நோய்தொற்று தடுப்பு ஊசி குறித்து புதிய அறிவிப்பு வழங்கப்படும் - சுகாதார அமைச்சர்

Share:

சுகாதார அமைச்சகம் கோவிட் 19 நோய்தொற்று தடுப்பு ஊசி பூஸ்தர் குறித்து விரைவில் புதிய அறிவிப்பு வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் டிசுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது கோவிட் 19 தடுப்பூசி பூஸ்தர் எடுத்து கொண்டவர்களின் எண்ணிக்கை 54 விழுக்காடு மட்டுமே. மூன்றாவது தடுப்பூசி பூஸ்தர் எடுத்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதைவிட குறைவாக இருப்பதாக சுகாதார அமைச்சர் டிசுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார்.

கோவிட் 19 நோய்தொற்றினால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு விரைவில் இதுக்குறித்து தகவல் அறிவிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.

நேற்று பதிவாகியுள்ள கோவிட் 19 மொத்த எண்ணிக்கை 12,757 என்றும் கடந்த வாரத்தை காட்டிலும் 88 விழுக்காடு அதிகமானதாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் டிசுல்கிஃப்லி அஹ்மாட் அறிவித்தார்.

Related News