ஷா ஆலாம், நவம்பர்.23-
உலு சிலாங்கூரில் உள்ள புக்கிட் செந்தோசாவில் 3 உணவகங்களில் எலி எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. உலு சிலாங்கூர் நகராட்சி மன்றம், மாவட்ட சுகாதார அலுவலகத்துடன் இணைந்து கடந்த புதன்கிழமை நடத்திய ஒப்ஸ் சூசி சோதனையின் போது இந்த சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
நகராட்சி மன்றத்தின் உரிமம் இன்றி உணவகங்களை நடத்துதல், ஊழியர்களுக்கு tifoid தடுப்பூசி போடாதது, அசுத்தமான சமையல் கருவிகள், சரியாகப் பராமரிக்கப்படாத குளிர்பதனப் பெட்டிகள், தரமற்ற கழிப்பறைகள் உள்ளிட்ட பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதைத் தொடர்ந்து, நகராட்சி மன்றம் 6 குற்றச்சீட்டுகளையும், மாவட்ட சுகாதார அலுவலகம் 3 குற்றச்சீட்டுகளையும் வெளியிடப்பட்டு, உணவகங்களை முழுமையாகச் சுத்தப்படுத்த 14 நாட்களுக்கு உடனடியாக மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவக உரிமையாளர்கள் சுகாதாரத் தரங்களை உறுதிச் செய்து, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று உலு சிலாங்கூர் நகராட்சி மன்றம் வலியுறுத்தியுள்ளது.








