Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கொலை வழக்கில் இரு இந்தியர்கள் விடுதலை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கொலை வழக்கில் இரு இந்தியர்கள் விடுதலை

சிரம்பான், டிச. 11-


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 25 வயது இளைஞர் ஒருவரை கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்ட இரு இந்திய நபர்களை சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

43 வயது B. அன்பழகன் மற்றும் 46 வயது L. சிவலிங்கம் என்ற அந்த இரு நபர்களுக்கு எதிரான கொலைக்குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரங்களை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு தவறிவிட்டதாக நீதிபதி ரொஹனி இஸ்மாயில்l தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்த இரண்டு நபர்களும் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு 9.15 மணியளவில் சிரம்பான்,ஜாலான் துவாங்கு முனாவிரில் 25 வயது எம். சுரேஸ் என்பவரை கொலை செய்ததாக குற்றஞ்சட்டப்பட்டு இருந்தன.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அன்பழகனும், சிவலிங்கமும் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →