Oct 16, 2026
Thisaigal NewsYouTube

முனைவர் பட்டம் பெற்ற கைதி ஒருவருக்கு பொது மன்னிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முனைவர் பட்டம் பெற்ற கைதி ஒருவருக்கு பொது மன்னிப்பு

ஷா ஆலாம், டிச. 11-


மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா இன்று புதன்கிழமை தமது 79 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய வேளையில் தமது பிறந்த தினத்தையொட்டி தத்துவத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற கைதி ஒருவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.

முராட் என்று புனைப்பெயரில் அடையாளம் கூறப்பட்ட அந்த கைதி, காஜாங் சிறைச்சாலையில் போதைப்பொருள் மறுவாழ்வு தடுப்புப்பிரிவில் 2001 ஆம் ஆண்டில் தமது 14 ஆவது வயது முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார்.

சிறையில் தண்டனை அனுபவித்த அதேகாலகட்டத்தில் கல்வியிலும் தீவிர கவனம் செலுத்தி, வர்த்தகத்தில் தத்துவத்துறையில் முனைவர் பட்டம் பெறும் அளவிற்கு தமது மறுவாழ்வை மேம்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

மலேசிய சிறைச்சாலை வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது நபராக முராட் விளங்குகிறார். கல்வியில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக, தமது பிறந்த நாளையொட்டி அந்த இளைஞருக்கு சிலாங்கூர் சுல்தான், பொது மன்னிப்பு வழங்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →