30 நிமிடம் ஓயாமல் வீசிய புயல் காற்றினால், 6 வீடுகள் சேததிற்கு உட்பட்டு உள்ளதாக, பகாங் ஃபெல்டா கெலங்கி 2 இல் வசித்து வரும் முகமட் ஃபஸ்லி சுலைமான் என்ற நபர் பகிர்ந்து கொண்டார். நேற்று மாலை 5 மணியளவில், 30 நிமிடம் ஓயாமல் வீசிய புயல் சுழன்று கொண்டே நகர்ந்தது என அவர் தெரிவித்தார்.
புயல் காற்றினால் வீட்டில் தகரங்களும் ஓடுகளும் பெயர்த்து கொண்டதால் அதனை ஈடுகட்டும் செலவு தம்மை அச்சுறுத்துவதாக 63 வயதானா சுலைமான் தன் மனநிலையைப் பகிர்ந்து கொண்டார்.
வீட்டின் தகரங்கள் பறந்த சம்பவமும் காற்றின் சத்தமும் தன்னை விட்டும் இன்னும் அகலவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.








