Jul 1, 2026
Thisaigal NewsYouTube
மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!
தற்போதைய செய்திகள்

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.19-

கோலாலம்பூர், Sprint நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட குடி போதை தடுப்புச் சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உட்பட மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 30 வயதுக்குட்பட்ட அந்த வழக்கறிஞர், தான் நேற்று மாலையே மது அருந்தியதாகவும் இவ்வளவு நேரம் கழித்து அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறிய போதிலும், சுவாசப் பரிசோதனையில் அவர் போதையில் இருந்தது உறுதிச் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வுத் துறைத் தலைவர் உதவி ஆணையர் முஹமட் ஸம்ஸுரி முஹமட் இசா தெரிவித்தார்.

மது போதையில் வாகனம் ஓட்டுவது உயிரிழப்புடன் கூடிய விபத்துகளுக்குக் காரணமாக அமைவதால், இதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்படாது என்று தெரிவித்த முஹமட் ஸம்ஸுரி, பொதுமக்கள் e-hailing சேவைகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

Related News