கடந்த ஏப்ரல் மாதம் 12 நாள் அன்று, குவந்தான் வான் படை பயிற்சி மையத்தில் ,புதிதாக பயிற்சியில் சேர்ந்த ஐந்து பயிற்சியர்களை அங்குள்ள பயிற்றுனர் ஒருவர் , அவர்களை அடித்த பகடிவதை செய்தாகவும் கொடுக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக 10 பேர் சாட்சிக்காக அழைக்கப்பட்டுள்ளதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் தொடப்புடைய பயிற்றுனருடன் மேலும் ஐந்து சக பயிற்றுனர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெற்று வருவதாக அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட ஐந்து புதிய பயிற்சியர்களில் ஒருவர் மட்டுமே முன் வந்து புகார் அளித்துள்ளாதால் இந்த சம்பவம் துள்ளியமாக விசாரிக்கப்பட்டு வருவதாக ராம்லி முகமது யூசுப் கூறினார்.








