Jan 11, 2026
Thisaigal NewsYouTube
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23 ரோலக்ஸ் கடிகாரங்கள்
தற்போதைய செய்திகள்

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23 ரோலக்ஸ் கடிகாரங்கள்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.10-

இராணுவப்படையில் மிக உயரிய பதவி வகித்த முன்னாள் அதிகாரியின் இரண்டாவது மனைவிக்குச் சொந்தமானவை என்று நம்பப்படும் கிழக்குகரை மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் திடீர் சோதனை மேற்கொண்டதில் 22 லட்சம் ரிங்கிட்டிற்கும் கூடுதலான மதிப்பிலான விலை உயர்ந்த பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது.

இன்று காலையில் எஸ்பிஆர்எம் அதிகாரிகள் அந்த வீட்டில் இருந்த இரண்டு பயணப் பெட்டிகளைச் சோதனையிட்டதில், சுமார் 20 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 23 ரோலக்ஸ் (Rolex) கைக்கடிகாரங்கள் கண்டெடுக்கப்பட்டன. பல்வேறு மாடல்களைக் கொண்ட அந்த விலை உயர்ந்த கடிகாரங்கள் அனைத்தும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த முறைகேட்டில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒரு நபரிடமிருந்து சுமார் 2.25 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சோதனையை எஸ்பிஆர்எம்மின் விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ ஸைனுல் டாருஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News