Oct 8, 2026
Thisaigal NewsYouTube

விதிமீறல்களுக்காக 15,000 கடைகளுக்கு அபராதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விதிமீறல்களுக்காக 15,000 கடைகளுக்கு அபராதம்

கோலாலம்பூர், ஜூலை.28-

கடந்த 2023ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, வணிக உரிமங்கள் மற்றும் அனுமதிகளை சட்டவிரோதமாக வெளிநாட்டினருக்கு மாற்றுவது உட்பட பல்வேறு நிபந்தனைகளை மீறியதற்காக ஊராட்சி மன்றங்கள் மொத்தம் 14,834 வணிக வளாகங்களுக்கு சம்மன்களை வழங்கியுள்ளன.

இந்தக் குற்றத்திற்காக 2,880 வளாகங்கள் சீல் வைக்கப்பட்ட வேளையில் 23 வளாகங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

எந்தவொரு வெளிநாட்டினரும் வணிகம், சிறு வணிகம், வணிக வளாகம், சில்லறை விற்பனைக் கடை, உணவகம், கார் பட்டறை மற்றும் சந்தை உரிமத்திற்கு விண்ணப்பிக்கவோ அல்லது வைத்திருக்கவோ அமைச்சும், ஊராட்சி மன்றங்களும் ஒரு போதும் அனுமதித்தது கிடையாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஊராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான அங்காடி வர்த்தக வளாகத்தில் வெளிநாட்டினரைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்துவதையும் ஊராட்சி மன்றங்கள் அனுமதிக்காது.

ஏனெனில், வணிக வாய்ப்புகள் மூலம் நாட்டு மக்களுக்கு பொருளாதார உயர்வை உறுதிச் செய்வதில் அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்று அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →