தெலுக் இந்தான், ஜெட்டி கம்போங் திரெங்கானு அருகே காணாமல் போய்விட்டதாக கூறப்படும் 14 வயது மாணவர், அங்குள்ள சுங்கை பேராக் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நேற்றிரவு 7 மணியளவில், வி.ஜோன்சன் என்ற அந்த மாணவரின் புத்தகப் பை மற்றும் அவர் அணிந்திருந்த ஆடைகள் ஆகியவை அந்த ஜெட்டியின் அருகே பொதுமக்களால் கண்டுப்பிடிக்கப்பட்டதாக ஹீலேர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர், எசிபி அமாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார். அம்மாணவரை தேடும் பணியை மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும், காவல் துறையினரும் முழு வீச்சில் முடுக்கியுள்ளதாக அமாட் அட்னான் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


