May 5, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் போக்குவரத்து இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு: 24 மணிநேர கண்காணிப்பில் போலீசார்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் போக்குவரத்து இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு: 24 மணிநேர கண்காணிப்பில் போலீசார்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.13-

சீனப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, கோலாலம்பூரில் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

தற்போது கோலாலம்பூரில் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் வாகனங்கள் பயணிப்பதாக கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL-இன் ITIS தரவுகள் காட்டுகின்றன. பண்டிகைக் காலத்தில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 60 லட்சமாக உயரக்கூடும் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் போக்குவரத்தை நிர்வகிக்கவும், பாதுகாப்பை உறுதிச் செய்யவும் 'ஓப் செலாமாட் 25' நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 400 அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொது பாதுகாப்பைக் கண்காணிக்க போலீசார் 24 மணி நேரமும் இடைவிடாது பணியில் இருப்பார்கள் என டத்தோ ஃபாடில் உறுதி அளித்தார்.

Related News