Oct 12, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ்காரரைக் கொல்ல முயற்சி: வர்ததகர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ்காரரைக் கொல்ல முயற்சி: வர்ததகர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஏப்ரல்.28-

கடமையில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை வாகனத்தில் மோதி, கொல்ல முயற்சி செய்ததாக வர்த்தகர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

சொந்த தொழில் நடத்தி வரும் 30 வயது எம்.எம் ஸ்டீவன் என்ற அந்த வர்த்தகர், நீதிபதி நோரிடா அடாம் முன்னிலையில் நிறத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி பிற்பகல் 2.45 மணியளவில் கோலாலம்பூர், தாமான் செராஸ் அருகில் சாலையோரத்தில் பெரோடுவா அருஸ் ரகக் காரைப் பயன்படுத்தி, கடமையில் ஈடுபட்டு இருந்த இன்ஸ்பெக்டர் ஹஸ்லான் அலி அப்துல் ஹாமிட் என்பவரை மோதிக் கொல்ல முயற்சி செய்ததாக ஸ்டீவன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டு விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் ஸ்டீவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →