Oct 2, 2026
Thisaigal NewsYouTube

மணல் அள்ளும் கும்பலால் ஆற்றுக்கு நாசம்: 2 மில்லியன் மக்களுக்கு குடிநீர் தடை!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மணல் அள்ளும் கும்பலால் ஆற்றுக்கு நாசம்: 2 மில்லியன் மக்களுக்கு குடிநீர் தடை!

கோலாலம்பூர், நவம்பர்.30-

ஜோகூர் ஆற்றில் ஏற்பட்ட கடுமையான மாசு காரணமாகக் கோத்தா திங்கி, ஜோகூர் பாரு, கூலாய் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 400 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் குடிநீர் விநியோகத் தடையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதுகாப்ப்புத் துறை நடத்திய விசாரணையில், இந்தப் பெரிய மாசுக்குக் காரணம் மணல் அள்ளும் பகுதிக்கு அருகில் இருந்த சேறு சேமிப்புக் குளத்தின் சுவர் உடைந்ததே எனத் தெளிவாகியுள்ளது.

இயற்கை வளங்கள், சுற்றுச் சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி கானி, இந்தச் சம்பவம் ஒரு தீவிரமான விவகாரம் எனக் கருதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், விசாரணையில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்கவும் கட்டளையிட்டுள்ளார். இந்தக் கடுமையான விளைவுகளின் தொடர்ச்சியாக, ஜோகூர் நீர் ஒழுங்குமுறை அமைப்பான Badan Kawal Selia Air Johor, சம்பந்தப்பட்ட மணல் அள்ளும் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

துன் மகாதீருக்கு துக்கத்தில் இருந்து மீள சற்று அவகாசம் தேவை – முக்ரிஸ்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்