கோத்தா பாரு, அக்டோபர்.04-
மெதுவோட்டத்தில் ஈடுபட்டு இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், மயங்கி விழுந்து மரணமுற்றார். புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது அமைதி இலாகாவைச் சேர்ந்த 50 வயது ஏசிபி ஃபாரிஸ் அம்மார் அப்துல்லா என்பவரே மரணமுற்ற போலீஸ் அதிகாரியாவார் என்று அடையாளம் கூறப்பட்டது.
ஏசிபி ஃபாரிஸ் அம்மார் அதிகாரி, மரணமுற்றதை புத்ராஜெயா, மருத்துவமனை உறுதிப்படுத்தியது. அவ்விலாகாவின் உளவுப்பிரிவின் உதவி இயக்குநர் என்ற முறையில் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை அவர் திறம்படவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயலாற்றி வந்துள்ளார் என்று அவ்விலாகாவின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ அஸ்மி அபு காசிம் புகழாஞ்சலி செலுத்தினார்.








