Sep 26, 2026
Thisaigal NewsYouTube
போதையில் வாகனம் ஓட்டி விபத்து - இராணுவ அதிகாரிக்கு தடுப்புக்  காவல் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

போதையில் வாகனம் ஓட்டி விபத்து - இராணுவ அதிகாரிக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

Share:

மெக்ஸ் எனப்படும் மாஜு விரைவுச்சாலையில் போதையில் எதிர் திசையில் வாகனம் ஓட்டி, ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமான 31 வயது இராணுவ அதிகாரியின் தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நிகழ்ந்த இந்த கோர விபத்தில், இ-ஹேலிங் வாகனத்தில் பயணம் செய்த வங்காளதேச சுற்றுப்பயணியான சமூக ஊடக பிரபலம் உயிரிழந்தார். அவரது மனைவி கடும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரியின் இரத்தத்தில் மதுவின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி இருந்ததை போலீஸ் சோதனைகள் உறுதி செய்துள்ளன. தற்போது இந்த வழக்கு கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் அந்த இராணுவ அதிகாரி, தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்த வங்காளதேச தம்பதியர், மலேசியாவை சுற்றிப்பார்ப்பதற்காக கோலாலம்பூர், அனைத்துலக விமான நிலையத்திலிருந்து மெக்ஸ் விரைவு சாலையில் இ-ஹெய்லிங் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிர்திசையில் வாகனத்தை செலுத்தியதாக நம்பப்படும் இராணுவ அதிகாரி, அத்தம்பதியர் பயணம் செய்த காரை மோதிய போது, ஒருவர் உயிரிழந்தார்.

Related News